முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவை கைது செய்வதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரையில் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடக் கோரி ஜே. ஸ்ரீ ரங்கா அண்மையில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (24) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உரியத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. நீண்ட ஒரு இடைவேளைக்குப் பின்னர் எனக்கு நீதிமன்றத்திலே ஒரு நியாயம் கிடைக்கப்பெற்றுள்ளது.
ரணில் அரசாங்கமோ, ராஜபக்ச அரசாங்கமோ இருந்திருந்தால் இந்த தீர்ப்பு கிடைப்பதில் தடையேற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கிருக்கின்றது. எனினும் நீதித்துறை உரிய முறையில் இயங்கி இருக்கின்றது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு எனக் குறிப்பிட்டார்.