யாழ். கந்தரோடையில் தேர்தல் குறித்த கலந்துரையாடல்-
யாழ். சுன்னாகம் கந்தரோடையில் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கஜதீபன்; ஆகியோரும், வலி தெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ் அவர்களும், யாழ். விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது வட மாகாசபைத் தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும், இளைஞர்கள் வாக்காளர்களை கூடுதலான வீதத்தில் வாக்களிக்கச் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் தேவைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது