Header image alt text

31வது ஒலிம்பிக் பிரேசில் ரியோ நகரில் தொடங்கியது
 
olympics31வது நவீன கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனெரோவில் பிரமிக்கத்தக்க தொடக்கவிழா வைபவத்துடன் தொடங்கின.

ரியோ நகரின் மரக்கானா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பிரேசிலின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தையும், அதன் பிரசித்திபெற்ற சுற்றுச்சூழலையும் வெளிக்காட்டும், ஒளி, இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தேறின. Read more

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் கிணற்றில் அகழ்வுப் பணிகள் நிறைவு

 tirukedheeswaramதிருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் உள்ள கிணற்றின் அகழ்வுப் பணிகள் நாலாவது நாளாகிய வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ராஜபக்ச தெரிவித்திருக்கினறார்.

கடந்த திங்கட்கிழமை இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் பதினைந்து அடி ஆழம் வரையில் அகழப்பட்ட இந்தக் கிணற்றில் இருந்து சில எலும்புகள், பல் ஒன்று நாணயம் ஒன்று உட்பட பல தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. Read more

nuvareliyaமலையகத்திலுள்ள பெருந்தோட்டம் ஒன்றின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இந்த தீர்ப்பை வழங்கினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் உடன் பிறந்த சகோதரர்கள். ஏனைய மூன்று பேரும் இரு சகோதரர்களின் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகின்றது. Read more

பொதுமக்களின் நிலத்தை கடற்படையினருக்கு கொடுக்க முள்ளிவாய்க்கால் மக்கள் எதிர்ப்பு

mullivaikalமுள்ளிவாய்க்கால் பகுதியில் வட்டுவாகல் என்னுமிடத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு அந்தக் காணிகளை கையகப்படுத்துவதற்காக நில அளவை செய்யச் சென்ற அதிகாரிகள் அப்பிரதேச மககளினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் வட்டுவாகல் என்னுமிடத்தில் 617 ஏக்கர் காணியை 3 ஆம் தேதி புதன்கிழமை முதல் 5 ஆம் தேதி வரையில் கடற்படையினருக்காக நில அளவை செய்யவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அளவையாளர் பா.நவஜீவன் அறிவித்திருந்தார். Read more