Header image alt text

sri_lanka norwayஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேர்க் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நோர்வே பிரதமருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

மீன் ஏற்றுமதி, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்துறை உட்பட பல விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்துவது குறித்து, இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில், அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேர்க் தனது பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNA Norwayநோர்வே நாட்டின் பிரதமருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடுத்துரைத்தார்.
மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், இச்செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பும் அவசியம் எனவும் எடுத்துரைத்தார். Read more

 கொழும்பு நகரத்தில் உள்ள சட்டவிரோத நடைவியாபாரிகளை அகற்ற நடவடிக்கை

colmboகொழும்பு நகரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான நடை வியாபாரிகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி சட்டவிரோத நடை வியாபாரிகளை உடனடியாக அகற்றுமாறு மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா பொலிஸாருக்கும், கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட ஆய்வின் போது 1158 சட்டவிரோத வியாபாரிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அண்மையில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த ஆய்வு விபரம் குறித்து கூறப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு நகர எல்லைக்குள் 720 பேர் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அதில் 699 பேர் புறக்கோட்டை பிரதேசத்தில் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

நடைபாதைகளில் அனுமதியற்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 221 லொத்தர் விற்பனை கூடங்களும், சட்டவிரோதமாக வாகனங்களில் விற்பனை செய்யும் 120 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் நடைபாதைகளில் 45 பத்திரிகை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த ஆய்வில் அறியமுடிந்துள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறியுள்ளது.

08 ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிப்பு
 
Fishஇலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கடமையாற்றும் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ் பாலசுகமுனியமுக்கு அமைச்சர் இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெளிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த மீன்கள், விநியோகம் செய்யப்படாமையினால் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுத்தியது யார் என்று  அறியுமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

யாராவது தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ இதனுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களிடம் இந்த நட்டத்தை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மணிலா சிறைச்சாலையில் 10 கைதிகள் கொலை 

philippineபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக சிறை காவலர் காயம் அடைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சிறையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சித்ததின் ஓர் அங்கமாக இது இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போதைக் குற்றங்கள் தொடர்பில் சிறையில் உள்ள 8 குற்றவாளிகள் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டோ போதை தொடர்புடைய குற்றங்களை எதிர்த்து கடுமையான பிரசாரங்களை தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. டஜன் கணக்கான விநியோகஸ்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மேலும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர.;

லிபியாவில் அரசு ஆதரவு படை முன்னேற்றம் மறுபுறம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

syria_aleppoலிபியாவில், இஸ்லாமிய நாடு என்ற ஐ.எஸ். தீவிரவாதக் குழுவின் செல்வாக்கு மிக்க பகுதியான சிர்டேவை அரசு ஆதரவு கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஐ.எஸ் படையினரால், தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்ட,  ஒகடோகு வளாகத்தைச் சுற்றிலும் உள்ள நிலக்கன்னிவெடிகள் மற்றும் குண்டுகளை அரசு ஆதரவுக் குழுவினர் அகற்றி வருகின்றனர். அரசு ஆதரவு குழுவினருக்கு,  அமெரிக்கப் படையினர் வான்வழிப் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
அப்பகுதியில் ஆப்ரிக்க மற்றும் அரேபிய பிரதிநிதிதிகள் மாநாட்டு அரங்கமாகப் பயன்படுத்திய,  கட்டிடம் பலத்த சேதம் அடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. Read more