Header image alt text

money_trainசேலம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளிலிருந்து சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு, சேலத்திலிருந்து ரயில் மூலம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இவை அழிக்கப்படுவதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக 325 கோடி ரூபாய் பணம், 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சேலம் – சென்னை ரயிலில் ஏற்றப்பட்டது.
 
பணம் ஏற்றப்பட்டிருந்த பெட்டி, ரயில் எஞ்சினுக்கு அடுத்ததாக இணைக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்து சேர்ந்தது. காலை சுமார் 11 மணியளவில் பணத்தை இறக்குவதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ரயில்வே காவல்துறையினரும் பணம் இருந்த சரக்கு பெட்டியைத் திறந்தபோது, அதன் மேலே ஓர் ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை போடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Read more

putin_erdoganரஷியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் சிரியாவில் உள்ள நெருக்கடியை சரி செய்வது குறித்து பொதுவான இலக்குகளை வைத்திருப்பதாகவும் மேலும் இரு நாடுகளின் கருத்துகள் ஒத்துப்போகாத பட்சத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானுடனான சந்திப்பிற்கு பிறகு புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளுக்குமான உறவில் சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு சமரசத்தின் வெளிப்பாடாக உள்ளாது. Read more

இலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல் பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது?

mother with childஇலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும்.

சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

book release02யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை விரிவுரையாளரும், சுயாதீன ஆராட்சியாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு என்ற நூலின் வெளியீட்டு விழா 06-08-2016 அன்று தமிழருவி த.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலா மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா தமிழ் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ் நூல் வெளியீட்டு விழாவில் நூலின் முதற் பிரதியை பிரித்தானியா தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச்செயலாளர் கலாநிதி இரவீந்திரநாதன் அவர்கள் பெற்றுக்கொள்ள. தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். Read more

J 002பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வது என பல வாக்­கு­று­தி­களை சர்­வ­தே­சத்­திற்கு உறுதி­ய­ளித்­துள்ள போதும் அதனை நிறை­வேற்­றாது பின்­வாங்கி செல்­வது துர­திர்ஷ்­டமே என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் தெரி­வித்தார்.

அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி அர­சியல் கைதி­களை விடுதலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பின் ஏற்­பாட்டில் யாழ்.நகரில் நேற்று நடத்தப்பட்ட கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.  அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், Read more