நாடளாவிய ரீதியில் 16 பரிசோதனை நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்று (27) 1,400 பேருக்கு  பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் பீ.சீ.ஆர்  பிரசோதனை நேற்று ஆரம்பமானதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் பேராதனை, கொழும்பு. களனி ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.