இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 241ஆக அதிகரித்துள்ளது.

புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பெண்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன்,  7 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.