இலங்கையில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார். இன்று இனங்காணப்பட்ட அத்தனை தொற்றாளர்களும் கொழும்பு கெசல்வத்தையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகியவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 269ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி இதுவரை 91 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது