கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 40 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 660 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இதுவரை 1059 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். Read more
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1085 ஆக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, மீள திறப்பது குறித்த விசேட கலந்துரையாடல், எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.