Header image alt text

மலர்வு- 10.03.1941 உதிர்வு-30.06.2020

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் சேனைக்குடியிருப்பு கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியராஜா புஸ்பமலர் அவர்கள் இன்று (30.06.2020) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more

இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி உள்ளிட்ட இறையாண்மையை பாதுகாப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.  இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் இடையிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் நேற்றுக் காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், இந்தியாவில் இருந்து கடல் வழியாக வரும் சட்ட விரோத படகுகளின் வருகையை தடுப்பது பற்றியும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.  எதிர்வரும் ஜூலை 6ம் திகதிமுதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என, சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தபால் வாக்கு சீட்டுகள் விநியோகம் மற்றும் தபாலில் இடுவதற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கின்றது.  இந்நடவடிக்கை நாளை மற்றும் நாளை மறுதினமும் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

பொது இடங்களில் முகக்கவசமின்றி நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  இன்று காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதனையடுத்து, இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2042ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல், மலேசியவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானம் மூலம் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படையினர், இன்று (30) குணமடைந்துள்ளனர்.  இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை, 836ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  பங்களாதேஷில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more