Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு (14.00) சுவிஸ் சூரிச் மாநகரின் புக்கேக் பிளாட்ஸ் (GZ Buchegg, Bucheggstrasse -93, 8057 Zürich) எனும் மண்டபத்தில் “முப்பத்தோராவது வீரமக்கள் தினம்” அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்கு இத்தால் மூலம் அறிய தருகின்றோம்.

இந்நிகழ்வில் “மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், கழகத்தின் செயலதிபருமான அமரர்.தோழர்.க.உமாமகேஸ்வரன் அவர்களையும், அவரது வழிகாட்டலில் தம்முயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகள், மற்றும் அனைத்து இயக்கப் போராளிகள் பொதுமக்கள் உட்பட, போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈர்ந்த, அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வுடன், மங்கள விளக்கேற்றல், மலரஞ்சலி மற்றும் கலை நிகழ்வுகள்” என்பன இடம்பெறவுள்ளன. Read more

சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் இன்று இலங்கை வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சீசெல்ஸ் நாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.  இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களைப் பெறுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இன்று திருமலையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  கடந்த தேர்தலை விடவும் வடக்கு, கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை பெறும் எனவும் தமிழ் பேசும் மக்கள் வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். Read more

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  அதன்படி, இதுவரை 811 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1562 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.  அம்பாறை பகுதியில் வைத்து கடந்த 23ஆம் திகதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். Read more

தென்மராட்சியின் வறணி பிரதேசத்தில் மக்கள் சந்திப்புக்கள்…. Read more