Header image alt text

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 09 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1602 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று அதிகாலை இலங்கை வந்துள்ளனர். அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகள் அமைப்பில் இருந்த காலப்பகுதியில் அவரால் நடாத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது. Read more

வடக்கு, கிழக்கில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.  எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஒரு பூரணமான இராணுவ ஆட்சியொன்றை ஜனநாயகத்தின் மூலம் பெற்றதாகக் கூறி நாட்டில் நிறுவினாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.