Header image alt text

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலையடுத்து,  கடந்த மார்ச் 20ம் திகதி தொடக்கம் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவந்த நிலையில், பின்னர் கட்டங் கட்டமாக தளர்த்தப்பட்டது. Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை, ஆகஸ்ட் 15ம் திகதி வரை தாமதப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் சிவில் விமானசேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  அத்துடன், இதுவரை வெளிநாடுகளில் உள்ள 50,000க்கும் அதிகமான இலங்கையர்கள், இலங்கை வருவதற்கு Read more

வவுனியா – கண்டி வீதியில், இன்று முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்ற விபத்தில், வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த சைக்கிளுடன் மோதுண்டு, வீதியருகே இருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, சைக்கிளை ஓட்டிச் சென்ற மகேஷ்வர ரட்ணசிங்கம் (வயது 59) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 22 பேர் இன்றையதினம் பூரண குணமடைந்துள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது. Read more