Header image alt text

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி வி.தமிழினியின் கல்வி நடவடிக்கைக்கு உதவியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர் சிவபாலன் அவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கி வருகின்றார். Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றங்களின் மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய கருப்பையா ஜிவராணி காணொளி மூலமாக நேற்று (30) உத்தரவிட்டார். Read more

இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla), நாளை (02) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வௌிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும் போராட்டம் ஒன்றை சர்வதேச சிறுவர் தினமான இன்று  முன்னெடுத்துள்ளனர். Read more