Header image alt text

மறைந்த கழகத் தோழரின் மனைவியின் மருத்துவ செலவுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர்களான தோழர்கள் சிவபாலன், வேந்தன் ஆகியோர் இம்மாதம் முதல் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்து, ரூபாய் 10,000/இன்று (08.10.2021) குறித்த தோழரது மனைவியின் கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடப்பட்டுள்ளது. அவர் குணமடையும் வரையில் தொடர்ந்து மாதாமாதம் மேற்படி உதவி வழங்கப்படுமென இரு தோழர்களும் தெரிவித்துள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகளை நவம்பர் மாதமளவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனை, கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more

18 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது. Read more

வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். Read more

நாட்டின் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ஒரு சிறப்புத் திட்டத்தை தொடங்க பெப்ரல் முடிவு செய்துள்ளது. மாற்றத்துக்கான பாதை’  என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், 100 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். Read more

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது. Read more