பாதாள உலக குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை சிறைச்சாலைகளில் செயற்பட அனுமதிக்கும் சிறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறைவாசம் அனுபவித்துவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தோர் சிறையிலிருந்து தங்கள் வலையமைப்பை செயற்படுத்துதல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகள் சிறை அதிகாரிகளின் நடத்தையைப் பொறுத்தே இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் முன்மாதிரியான நடத்தை மூலம் அவர்களின் தொழில் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறியவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர்  தெதெரிவித்தார்.