மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இலங்கைக்கான கியூப தூதுவர் Andrés Marcelo Garrido-வுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிநேகபூர்வமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இருதரப்பு நட்புறவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு நிகழ்ச்சி நிரல்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், வௌிவிவகார செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.