Header image alt text

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் பாராளுமன்ற செய்தி சேகரிப்புக்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் கிணறொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 1529 ரவைகள் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. Read more

முதலாம் திகதி தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read more

16.10.2018இல் வவுனியாவில் மரணித்த தோழர் ரமேஷ் (பெரியண்ணன் ஜெகதீஸ்வரன் – வவுனியா) அவர்களின் மூன்றாமாண்டு நினைவுநாள் இன்று….

இன்று நள்ளிரவு முதல் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன. Read more

திவிநெகும நிதியத்தின் நிதியை மோசடி செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்நாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். Read more

மாகாணங்களுக்கு இடையில் அமுலில் இருக்கும் பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. Read more

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கொழும்பில் இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் ஏற்கெனவே ஒரு தடவை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் இன்று தடுப்பூசி ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கொழும்பு − பிஸ்டல் வீதியிலுள்ள கட்டிடமொன்றிலிருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரிஸ்டல் வீதியிலுள்ள கட்டிடமொன்றின் 5 ஆவது மாடியிலுள்ள மலசல கூடத்தில் இருந்தே இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட  சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடைய 63 சந்தேகநபர்களையும் இம்மாதம் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக இன்று  (14) உத்தரவிட்டார். Read more