Header image alt text

01.04.1993 அன்று வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கரன் (வீரபுத்திரன் இன்பரவி – கடுக்காமுனை), காளிதாஸ் (அங்குசாமி சந்திரமோகன் – ஏறாவூர்), மதன் (கிறிஸ்டியான் ஜெபஸ்டியான் – கல்லடி) ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தை நீக்குமாறு சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உத்தேச சட்டமூலத்தின் 4(1)(அ) பிரிவின் பிரகாரம், பயங்கரவாதத்திற்கு எதிராக மரண தண்டனை விதிப்பதாகக் கூறப்பட்டுள்ள சரத்து குறித்து மிகவும் கவலையடைவதாகவும் சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு என்பனவற்றையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். Read more