பூநகரி தோழர் ஜெயந்தன் அவர்களது சகோதரரின் மகளது மரணச் சடங்கிற்காக கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக சிறு தொகை நிதியுதவி நேற்று (04.04.2023) வழங்கப்பட்டது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் தோழர் மணியம், கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் தோழர் ராஜா ஆகியோர் மேற்படி நிதியுதவியை கையளித்தனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் பாரத் லால் தலைமையிலான இந்திய தூதுக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.