கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது. Read more
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.