கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று(08) பிற்பகல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளார். Read more
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 02 நாட்களுக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான் காதலியார் சமளங்குளத்தைப் பிறப்பிடமாகவும் கோயில்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம்) அவர்களின் அன்புத் தாயாருமாகிய வல்லிபுரம் பாக்கியம் அவர்கள் நேற்று (08.04.2023) இயற்கையெய்தினார்.