புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களின் ஒன்றுகூடும், கருத்து வௌியிடும் உரிமைகளுக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் இந்த சட்டமூலமானது, உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சம்மேளனம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்காலிகமாக அதிகரித்துள்ளது. இதற்கிணங்கவே இலங்கை மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு கடனுதவியை வழங்கியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கடன் பேச்சுவார்த்தை நடைமுறையில் அனைத்து கடன் வழங்குநர்களும் இணைந்துகொள்ள முடியும் என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷூனிச்சி சுஸூகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனா இணைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இந்த கருத்து வௌியிடப்பட்டுள்ளது.