இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் – யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவின் காரைக்கால் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். Read more
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்தும் காலத்தை பங்களாதேஷ் மேலும் 06 மாதங்களுக்கு நீடித்துள்ளது. பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட கடனின் முதல் பகுதியை ஆகஸ்ட் மாதத்திலும் இரண்டாம் பகுதியை செப்டம்பர் மாதத்திலும் இலங்கை செலுத்த வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது.