எல்லை மீள் நிர்ணயக் குழு உள்ளூராட்சிச் சபைகளின் புதிய எல்லைகளை வகுத்து, தொகுத்து இடைக்கால ஆவணம் ஒன்றை விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமரிடம் கையளித்துள்ளது. எண்ணாயிரத்துக்கும் அதிகமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியளவுக்கு குறைக்கும் நோக்கத்திற்கமைய, நடைமுறையில் உள்ள அடுத்தடுத்து அமைந்துள்ள வட்டாரங்களின் பிரதேசங்கள் இணைக்கப்பட்டு புதிய வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Read more
கடும் வெப்பத்துடனான காலநிலையால் அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை 250 மில்லிமீற்றர் நீர் அருந்த வேண்டும் என சுகாதாரத்துறை பொதுமக்களை கோரியுள்ளது. இதன்மூலம் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும் என விஷேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். மதிய நேரங்களில் தாகம் எடுப்பதற்கு முன்னதாக நீரை அருந்த வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இணையவழி வருகை அட்டை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டவர்கள், தாம் இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இதனை நிரப்ப முடியும். பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்கான தனது ஆலோசனையை புதுப்பித்துள்ள ஆலோசனையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.