பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கண்டித்து வடக்கு, கிழக்கு மாணங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வரும் முயற்சி, உடனே கைவிடப்பட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.