குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிதி, பொருளாதார உறுதிப்பாட்டு, தேசிய கொள்கைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. Read more
அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பெண் படகு மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.