மட்டக்களப்பு எரிவில் பகுதியைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழுள்ள 40 மாணவர்களுக்கு இன்று (23.04.2023) 120,000/- பெறுமதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஏழாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் இவ்வுதவி வழங்கப்பட்டது.
பாடசாலை போக்குவரத்துச் சேவைக்கான கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ஹரிஸ்சந்திர பத்மசிறி இதனை இன்று(23) தெரிவித்தார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 5 வீதம் தொடக்கம் 8 வீதத்தினால் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.