உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார். கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருணாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி ஆண்டகையிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அனுமதியுடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

இறுவட்டுகளின் மூலம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கொழும்பு பேராயரின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அருட்தந்தை  ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருநாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அந்தனி ஆண்டகையிடம்  கையளித்ததாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அனுமதியுடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

இதனிடையே, முன்னாள் சட்ட மாஅதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் வழங்கிய நேர்காணல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர் சுல்ஃபிக் ஃபர்சான் இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் காணப்படுவதாக 2021 மே மாதம் முன்னாள் சட்ட மாஅதிபர் வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக,  தப்புல டி லிவேரா மூன்று தடவைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், கைது செய்யப்படுவது அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.