ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஏழாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய 25,000/- நிதியில் நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை ஆக்ரா தோட்டத்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு இன்று (29.04.2023) விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
சீனாவின் நிதியுதவியின் கீழ் கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக புதிய வீடமைப்பு திட்டங்களை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. 450 மில்லியன் டொலர் நிதியுதவியை சீனா இதற்காக வழங்கவுள்ளது. கொழும்பின் 5 இடங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் W.S. சத்யானந்த தெரிவித்தார்