அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.  Read more
		    
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பெண் படகு மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. Prednisolone  கண் சொட்டு மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக்  கண்டித்து வடக்கு, கிழக்கு மாணங்களில்  இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. வட மாகாணத்தின்  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 
எல்லை மீள் நிர்ணயக் குழு உள்ளூராட்சிச் சபைகளின் புதிய எல்லைகளை வகுத்து, தொகுத்து இடைக்கால ஆவணம் ஒன்றை விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமரிடம் கையளித்துள்ளது. எண்ணாயிரத்துக்கும் அதிகமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியளவுக்கு குறைக்கும் நோக்கத்திற்கமைய, நடைமுறையில் உள்ள அடுத்தடுத்து அமைந்துள்ள வட்டாரங்களின் பிரதேசங்கள் இணைக்கப்பட்டு புதிய வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
கடும் வெப்பத்துடனான காலநிலையால் அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை 250 மில்லிமீற்றர் நீர் அருந்த வேண்டும் என சுகாதாரத்துறை பொதுமக்களை கோரியுள்ளது. இதன்மூலம் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும் என விஷேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். மதிய நேரங்களில் தாகம் எடுப்பதற்கு முன்னதாக நீரை அருந்த வேண்டும். 
இலங்கை அரசாங்கம் இணையவழி வருகை அட்டை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டவர்கள், தாம் இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இதனை நிரப்ப முடியும். பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்கான தனது ஆலோசனையை புதுப்பித்துள்ள ஆலோசனையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 
18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று….
இலங்கை 75 வருடங்களின் பின்னர் தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை சுதந்திரத்தின் போது நம்பிக்கைக்குரிய சமூக, பொருளாதார குறியீடுகளை கொண்டிருந்த இலங்கை, 75 வருடங்களின் பின்னர் தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  
பொதுமக்கள் சுதந்திரமாக ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, சமய நிகழ்வுகள் தவிர இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலி முகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.