Header image alt text

பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உயர்மட்ட சந்திப்பில் கலந்துகொண்டபோது, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்தார். Read more

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். இந்த சட்டமூலத்தை கடந்த 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார். Read more

கணக்கறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, விடயங்களுக்கு பொறுப்பான பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது, இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

இதயபூர்வ அஞ்சலிகள்-

Posted by plotenewseditor on 12 April 2023
Posted in செய்திகள் 

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தும் ஸ்பிரிங் மாநாட்டிற்கு இணையாக இலங்கை தூதுக்குழுவுடன் நேற்று(11) நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார். Read more

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கியின் அதிகாரிகளால் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளையும் இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11.04.1984ல் ஆரியகுளம் சந்தியில் மரணித்த மாணவர் பேரவையின் தோழர்கள் கேதீஸ்வரன் (தம்பலகமம்), கிருபானந்தன் (கொக்குவில்) ஆகியோரின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

11.04.2014 ல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் நந்தன் (பசுபதி பரசோதிலிங்கம் – மல்லாவி) அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நிதி கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பிரமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவினால் பிரதமர் அலுவலகத்தில் இன்று(11) காலை கையளிக்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more