இலங்கை – இந்திய கைதிகள் பரிமாற்றம்-

தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில்இ 2010இல் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாகஇ கொழும்புஇ வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு இந்தியக் கைதிகள் தமிழ்நாட்டின் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்த தமிழ்நாடு பொலிஸ் குழுவொன்று இவர்களை விமானம்மூலம் நேற்றுக்காலை திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளது. இவர்கள் திருச்சி மத்திய சிறையிலும் பெண்கள் சிறையிலும் அடைக்கப்படவுள்ளனர். இவர்களில் மூவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் 10 ஆண்டுகளையும்இ இரு பெண்களில் ஒருவர் ஆறு ஆண்டுகளையும்இ மற்றவர் ஐந்து ஆண்டுகளையும் சிறையில் கழித்துள்ளனர். 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஆண் கைதி வெலிக்கடையில் 10 ஆண்டுகளை கழித்துள்ளார். எஞ்சிய தண்டனைக் காலத்தை இவர்கள் இந்திய சிறையில் அனுபவிக்கவுள்ளார். மேலும் இரண்டு கைதிகள் இன்றும்இ மூன்று கைதிகள் நாளையும் கொழும்பில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு-

நாட்டில் உள்ள 621 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுள் 598ற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் அதிகரித்த பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்துக்களை அடுத்து பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ள இடங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கடந்த ஜூலை 2ம் திகதி ஜனாதிபதி பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார். இந்த பணிப்புரை விடுக்கப்பட்டது தொடக்கம் இதுவரையில் 598 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். சிவில் பாதுகாப்பு படையினர்இ பொலிஸார் மற்றும் கிராம சேவகர்களின் உதவியுடன் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பக்கச்சார்பற்ற விசாரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்-

கம்பஹாவின் வெலிவேரிய மற்றும் கொழும்பின் கிரான்ட்பாஸ் வன்முறைச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும் கூடிய கவனம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து இலங்கை பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யக்கூடிய வகையில் பக்கச்சார்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 1ம் திகதி வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன்இ பலர் காயமடைந்திருந்தனர். ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி கிரான்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்திருந்தனர். அமைதியான முறையில் மக்கள் ஒன்று கூடுதல்இ சுதந்திரமாக மத வழிபாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க 100இ000க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்-

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணபித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் அதிகமான 45இ969 விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளைஇ சுமார் 39இ000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கண்டி மாவட்டத்திலும் 11இ000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நுவரெலியா மாவட்டத்திலும் கிடைக்கப் பெற்றுள்ளன. 12இ000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் யாழ். மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி நிறைவடையவுள்ளது. மாகாண சபை தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் மற்றும் 10ஆம் திகதிகதிகளில் நடைபெறவுள்ளது என தேர்தல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பில் கைதானவர்களில் கடற்படை வீரர்களும் உள்ளடக்கம்-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் கைதானவர்களில்இ கடற்படையின் 03 வீரர்களும்இ கடற்படையில் பணியாற்றும் மேலும் சிலரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன குறிப்பி;ட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர்களால் இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்இ அவுஸ்திரேலியாவிற்கு ஒருவரை அனுப்புவதற்கு 8 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றமையுடன் தொடர்புடையதாகத் தெரிவித்துஇ 14 பேர் நேற்று மாத்தறை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

வலிகாமம் வடக்கில் மக்களுக்கு தெரியாமல் காணி சுவீகரிப்பு-

யாழ். வலிகாமம் வடக்கில். கடல் வளம் மிகுந்த காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பது அப்பிரதேச மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போது வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து அனாதைகளாக உள்ள நிலையில் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திரத்திற்கான அரங்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில்  உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதேசத்தில் மக்கள் குடியேறவில்லைஇ அங்கு மக்கள் மீளச் செல்லமுடியாத நிலைமையில் அந்த பிரதேசங்களை மக்களுக்கு தெரியாமல் இராணுவம் சுவீகரிக்கின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரச அதிகாரிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கையின்போது அரச அதிகாரிகளும் அச்சத்துடனேயே தங்களுடைய கடமைகளை முன்னெடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.