முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திப்பொன்று நடைபெற்றதே தவிரவும் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையோ உறுதிமொழிகளையோ வழங்கும் வகையில் அச்சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை எனவும்
புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, Read more
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியை அமைக்க வேண்டும் என கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு நிரந்தர நீதாய நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் கொச்சினுக்கு இடம்பெறும் விமானசேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.