யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் சனசமூக நிலையமும் அரும்புகள் பாலர் முன்பள்ளியும் இணைந்து நடத்திய வருடாந்த விளையாட்டு விழா இன்று (18.08.2019) பி.ப. 2.00 மணியளவில் நிலைய முன்பள்ளி தலைவர் செல்வக்குமார் தலைமையில் வைரவர் ஆலய முன்றளில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டிருந்தார். Read more
யாழ். ஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் 68ம் ஆண்டு நிறைவையொட்டிய விளையாட்டு போட்டியும் கௌரவிப்பும் இன்று (18.08.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சனசமூக நிலைய தலைவர் ச.பிரபாகரன் தலைமையில் மூத்தநயினார் ஆலய முன்றளில் நடைபெற்றது.