முதல் பெண் போராளி தோழர் ஊர்மிளா.
40 ஆவது நினைவு தினம். விதைப்பு : 19.05.1980
உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட வேளையில் அதன் மகளீர் அணியின் செயலாளராக இருந்த ஊர்மிளா என்பவருடன் அறிமுகமாயிருந்தார். ஊர்மிளா மிகுந்த தேசிய உணர்வுகொண்ட போராளி என்பது தவிர அடக்குமுறைகள் மிகுந்த சமூகத்தில் எமக்கு ஆதரவாக கிடைத்த முதல் பெண் என்பது இன்னொரு சிறப்பம்சம் (ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள், கணேசன் ஐயர்). தெல்லிப்பளை வறுத்தலைவிளானை பிறப்பிடமாக கொண்ட தோழர் ஊர்மிளா முதல் ஈழ விடுதலைப் போராளி மட்டும் அல்லாது அவரே முதல் பெண் விடுதலை புலியும் ஆவார். Read more
வவுனியா கோவில்குளம் கோவில் புதுக்குளம், வெளிக்குளம் நேற்றுக்காலை வவுனியா கோவில்குளம் கோவில் புதுக்குளம், வெளிக்குளம் பகுதி பிரதேச மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பத்தினருக்கு இந்நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது.
21/05/2020 மாலை வவுனியா மகாஇறம்பைக்குளம் மக்களுக்கான இடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு. க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான த.யோகராஜா அவர்களின் தலைமையில் மக்களுக்கான இடர்உதவி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான திரு.க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு. வே.குகதாசன் அவர்களின் தலைமையில் செட்டிகுளம் பிரதேச மக்களுக்கான இடர் நிவாரணப் பொருட்கள் (21/05/2020) காலை அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1094 ஆக அதிகரித்துள்ளது.
சீசெல்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 பேர், இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சீசெல்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, விசேட விமானம் மூலம், இவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.