21/05/2020 மாலை வவுனியா மகாஇறம்பைக்குளம் மக்களுக்கான இடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு. க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான த.யோகராஜா அவர்களின் தலைமையில் மக்களுக்கான இடர்உதவி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிவாரணப் பொருட்களுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) ஜேர்மன் கிளைத் தோழர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான திரு.சு.காண்டீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.