Header image alt text

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில்,  கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். Read more

மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள 64ஆம் கட்டை மலையில் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்காக, பொதுமக்களின் விவசாயக் காணிகளை அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (14) காலை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. Read more

நாளை (15) முதல், திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், பற்றறைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படவுள்ளன. Read more

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றது. Read more

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அதி குற்றச்சாட்டுப் பத்திரத்தை மீளப்பெற தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (13) அறிவித்தார்.

Read more

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே அவர்கள் இன்று (13) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜெனரல் நராவனே பிரதமரிடம் குறிப்பிட்டார். Read more

தங்களுடைய சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைக்குத் தீர்வாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கை ஏற்க மறுத்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இன்று (13) தீர்மானித்துள்ளனர். Read more

தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். Read more

மறைந்த கழகத் தோழரின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்புக்கென கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்களால் அமைப்பாளர் தோழர் ரங்கா ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் 30,000/= வழங்கி வைக்கப்பட்டது.

கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 63 பேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். Read more