இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின் மூலோபாய கண்காணிப்பினை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
X-Press Pearl கப்பல் கடலில் மூழ்கியதால், கடற்றொழிலில் ஈடுபட தடை விதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு நட்ட ஈடு வழங்க மேலும் 1,514 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால் இந்த நிதி திறைசேரிக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 10 ஆம் திகதி அளவில் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 37 இலட்சம் வரையான விண்ணப்பங்கள் இதற்காக கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் B.விஜேரத்ன தெரிவித்தார்.