நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 10 ஆம் திகதி அளவில் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.  37 இலட்சம் வரையான விண்ணப்பங்கள் இதற்காக கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் B.விஜேரத்ன தெரிவித்தார்.

மதிப்பீட்டு அதிகாரிகளால் விண்ணப்பதாரர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய தகவல்கள் இதுவரை 32 இலட்சம் வீடுகளுக்கும் சென்று சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எஞ்சிய தரப்பினரிடம் இருந்து ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் தகவல்களை சேகரிக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.