வவுனியா – வெடுக்குநாறி மலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read more
யாழ். கட்டுடை விநாயகர் முன்பள்ளிக்கு குடிநீர்த்தாங்கி பொருத்தி குடிநீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தளபாடங்களும் வழங்கப்பட்டன. கட்டுடை கிராமத்தில் தேவையுடைய குடும்பமொன்றுக்கு கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டதோடு வயோதிபர் ஒருவருக்கு மெத்தையும் வழங்கப்பட்டது. மேலும் கட்டுடை ஞானவைரவர் சனசமூக நிலையத்தினை சுற்றியுள்ள வாய்க்கால் சுவர் கட்டுமானமும் நிறைவேற்றிக் கையளிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு அமெரிக்கா எடுத்த தீர்மானம் கவலையளிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை வௌிவிவகார அமைச்சினால் கவலை வௌியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தினால் ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம், வௌிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.