வவுனியா – வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரகங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலய நிர்வாகத்தினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். மாவட்ட தொல்பொருள் திணைக்களத்தினரும் நெடுங்கேணி பொலிஸாரும் வெடுக்குநாறி மலைக்கு சென்றிருந்தனர். சிவலிங்கம், அம்மன், முருகன், பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் உள்ளிட்ட விக்கிரகங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. Read more
வவுனியா கந்தபுரத்தைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழுள்ள நான்கு மாணவர்களுக்கு இன்று 10,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன. கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் இரா.தயாபரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் இடம்பெற்ற மேற்படி உதவி வழங்கும் நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் இரா.அந்தோனிப்பிள்ளை (கொன்சால்) அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த விசேட நிபுணர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமைச்சின் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வீடுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை கிராம உத்தியோகத்தர்கள் தற்போது முன்னெடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. படிவத்தை பூரணப்படுத்தி விரைவாக ஒப்படைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.