நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் என்னா பியர்டரை(Anna Bjerde) சந்தித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி இணைந்து ஏற்பாடு செய்த ஸ்ப்ரிங் மாநாட்டிற்கு இணையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more
ரயில் மற்றும் பஸ்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு பதிலாக QR CODE முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்குள் புதிய செயற்றிட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை மே 29ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று(08) பிற்பகல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 02 நாட்களுக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான் காதலியார் சமளங்குளத்தைப் பிறப்பிடமாகவும் கோயில்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம்) அவர்களின் அன்புத் தாயாருமாகிய வல்லிபுரம் பாக்கியம் அவர்கள் நேற்று (08.04.2023) இயற்கையெய்தினார்.
இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின் மூலோபாய கண்காணிப்பினை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
X-Press Pearl கப்பல் கடலில் மூழ்கியதால், கடற்றொழிலில் ஈடுபட தடை விதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு நட்ட ஈடு வழங்க மேலும் 1,514 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால் இந்த நிதி திறைசேரிக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 10 ஆம் திகதி அளவில் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 37 இலட்சம் வரையான விண்ணப்பங்கள் இதற்காக கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் B.விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.