 எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலானது நாட்டில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.

வாக்காளர்கள், தமது பெயர்கள் வாக்காளர் பட்டியல்களில் உள்ளடக்கப்படாமல் இருந்தால், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும். வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.