 யாழ். ஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் 68ம் ஆண்டு நிறைவையொட்டிய விளையாட்டு போட்டியும் கௌரவிப்பும் இன்று (18.08.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சனசமூக நிலைய தலைவர் ச.பிரபாகரன் தலைமையில் மூத்தநயினார் ஆலய முன்றளில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குமாரசிறி ஆகியோரும் ,
கௌரவ விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலய அதிபர் வே. சிவசக்திவேல் , வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ. ஜெபநேசன் , கிராம சேவகர் மு.அருளன், பொது சுகாதார பரிசோதகர் ச.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.