இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவதற்காக புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று காலை சென்றபோது
எழுதுமட்டுவாழ் பகுதியில் வழிமறித்த பொலிஸார், மாவட்ட வைத்திய அதிகாரியின் சான்றிதழின்றி வேறு மாவட்டம் போக இயலாது என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து பயணிக்க அனுமதி வழங்காததால் அவர்கள் திரும்பி வந்துள்ளனர். இன்றுமாலை 06.18 அளவில் மாவிட்டபுரம் தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் தலைமையில் அமைதியான முறையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு மற்றும் அஞ்சலி கூட்டத்தில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) யாழ் மாவட்ட அமைப்பாளர் பா. கஜதீபன், தமிழரசு கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன், கலையம்சன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
