யாழ். கட்டுடை விநாயகர் முன்பள்ளிக்கு குடிநீர்த்தாங்கி பொருத்தி குடிநீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தளபாடங்களும் வழங்கப்பட்டன. கட்டுடை கிராமத்தில் தேவையுடைய குடும்பமொன்றுக்கு கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டதோடு வயோதிபர் ஒருவருக்கு மெத்தையும் வழங்கப்பட்டது. மேலும் கட்டுடை ஞானவைரவர் சனசமூக நிலையத்தினை சுற்றியுள்ள வாய்க்கால் சுவர் கட்டுமானமும் நிறைவேற்றிக் கையளிக்கப்பட்டது.
எமது கட்சி உறுப்பினர் அ.காண்டீபன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்ட குறித்த உதவி வழங்கும் நிகழ்வுகளில் எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வலிதென்மேற்கு பிரதேசக் கிளைத் தலைவருமான ந.கணேந்திரன், வலிதென்மேற்கு கிளையின் பொருளாளர் லோ.றமணன், கட்சியின் மகளிர் பிரிவு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 