Header image alt text

கோண்டாவில் கிழக்கில் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

kondavilயாழ். கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டுக் கழகத்தினது உயர்த்தும் கரங்கள் செயற்பாட்டின் ஊடாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கிராமத்தின் வறிய மாணவ, மாணவியர்க்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (21.12.2014) இடம்பெற்றது. ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ம. சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் சனசமூகநிலைய மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திரு. இ.கெங்காதரன் அவர்களும் சமூக சேவையாளர் திரு. ஜெயக்குமார் அவர்களும் மேலும் பல இளைஞர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

kondavil0 kondavil1 kondavil2 kondavil4 kondavil5 kondavil6 kondavil7 kondavil8 kondavil9 kondavil10

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமீர் அலி எம்.பி பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு-

mathri richardஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பின்னர் அமீர் அலி ஆகியோர் தீர்மானித்துள்ளனர். இன்றுபிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர்கள் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து தமது ஆதரவினை தெரிவிததுள்ளனர். இவர்களது தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார். எதிரக்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேன திறந்தவெளி அரங்கில் எதிரணியின் தேர்தல் கூட்டம்-

kinikath1kinikathஎதிரணியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மத்திய மாகாணசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.மு. பியதாச தலைமையில் நேற்று (21.12.2014) ஞாயிறு மாலை கினிகத்தேன திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பெருந்திரலான பொதுமக்களும், ஜனாதிபதி வேட்பாளரும் முன்னைய சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அவர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான, பாட்டாளே சம்பிக்க ரனவக்க, ஜனநாயக கட்சி தலைவர் ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களும், ஜனநாயக தேசிய முன்னணி தலைவரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுரூபரன், புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், ஜனநாயக தேசிய முன்னணியின் பிரதித்தலைரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் அவர்களும், ஜனநாயக தொழிலாளர் முன்னணி தலைவர், ஆ.ளு. செல்லச்சாமி அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களான யோகராஜன், ராஜதுரை, ராதாகிருஸ்ணன்,மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், ஜக்கிய தேசிய கட்சி மற்றும் எதிர் அணி அமைப்பாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள்-

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மொரிசீயசுக்கு வெள்ளிக்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது தொடர்பான விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் இந்தர்ஜித் சிங், 2 ஆழ்கடல் ரோந்து கப்பல்களுக்கான ஒப்பந்தங்களை இலங்கை கொடுத்துள்ளது. இந்த கப்பல்கள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த கப்பல்கள் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்த தகவல், இந்தியாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.