Header image alt text

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த உயர்தர மாணவன் உயிரிழப்பு-

tttttவவுனியாவில் நேற்று (30.01.2015) இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களில் ஒருவரான 17வயதான செல்வன் சற்குணராசா சுலக்சன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். வவுனியா தமிழ் மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவரான வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த இம்மாணவர் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று வந்தார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று நண்பகல் 12.15அளவில் கொழும்பிலிருந்து வந்த பஸ்வண்டி பாடசாலை விளையாடடுப் போட்டியினில் பங்குபற்றிவிட்டு பாடசாலை திரும்பிய மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி;யுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாணவன் சற்குணராசா சுலக்சன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30அளவில் மரணமாகியுள்ளதுடன், இவருடன் பயணித்த இன்னொரு உயர்தர வகுப்பு மாணவரான சுப்பிரமணியம் கிறிஷாந்தன் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றார். உயிரிழந்த மாணவன் சற்குணராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தோணிக்கல் இந்து மயானத்தில் அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். 

வடக்கு ஆளுநர் நியமனத்திற்கு கனடா வரவேற்பு-

vadakku alunarஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக இலங்கை அரசாங்கம் மீண்டும் நியமித்தமையை வரவேற்றுள்ள கனடா, வடக்கின் புதிய ஆளுநராக இராணுவப் பின்னணி இல்லாத சிவிலியன் ஒருவரை நியமித்தமையையும் வரவேற்றுள்ளது. இவை தொடர்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இலங்கை மக்கள் வழங்கிய ஆணையை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய வகையில் செயற்படுத்துவார் என நம்புகின்றேன். இலங்கையில் அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கப்பாட்டை உண்மையானதாக ஏற்படுத்துதல் என்பவை தொடர்பில் கனடா தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையில் நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக தாம் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்துக்கு எச்சரிக்கை-

முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசிலிருந்து விலகி விடுவோம் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அரசும் முன்னைய அரசைப் போலவே, கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும், ஊழல் செய்தவர்களையும் தண்டிக்கத் தவறினால், 100 நாள் செயற்திட்டத்துக்கு முன்னதாகவே, நாம் அரசிலிருந்து இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில், ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிப்பதுடன், இதன் செயலாளரான சம்பிக்க ரணவக்க அமைச்சராகவும் பதவியில் இருப்பது இங்க குறிப்பிடத்தக்கது.

கமலேஷ் சர்மா இலங்கைக்கு விஜயம்-

kamalesh sharmaபொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இன்றையதினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. பொதுநலவாய தலைமைத்துவம் குறித்து வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதுடன், அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரிபால சிறிசேன அரசு குறித்து பிரித்தானியா நம்பிக்கை-

maiththiribala arasu kuriththuஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது என, தனது இருநாள் விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் மூலம் தெளிவாகியதாக, பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் குறிப்பிட்டுள்ளார். தனது விஜயத்தினை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பியவேளை இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான விஷேட சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஹியூ ஸ்வைர் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது முறை என்பதோடு, புதிய அரசு பதவியேற்ற பின் நாட்டுக்கு வருகை தந்துள்ள முதலாவது மேற்குலக நாடுகளின் இராஜதந்திரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரை அவர் சந்தித்துள்ளார். தனது கடந்த முறை விஜயத்தை விட இம்முறை இலங்கையின் சூழல் மாற்றமடைந்திருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டார் விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு-

qutar vipathuகட்டாரில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், இலங்கையைச் சேர்ந்த விமானப்பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விமானப் பணியாளர்கள் இருவர் உட்பட மற்றுமொரு விமானப்பணிப்பெண்ணும் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த டிசம்பர் 12ஆம் திகதி அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவியே, இந்த விபத்தில் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.ஸ்ரீபவன் பதவியேற்றதால் நெருக்கடிகள் நிவர்த்தியாகும்-

பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் பதவியேற்றதன் பின்னர் சட்டத்துறையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் செயற்பாட்டு ரீதியாக நிவர்த்தி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை எதிர்காலத்தில் கூடி ஆராயவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரண தெரிவித்துள்ளார். இதுவரை பிரதம நீதியரசராக செயற்பட்ட மொஹான் பீரிஸ் தமது பதவி விலகலை அறிவிக்காத போதும், புதிய நீதியரசரின் பதவியேற்பு சட்டரீதியானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை வரலாற்றில் 2ஆவது தமிழ் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்-

k. sri bawan pathaviyetrathaalஇலங்கையின், 44 வது பிரதம நீதியரசராக நீதியரசர் கே.ஸ்ரீபவன் நேற்று சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் நேற்றுமாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை நீதித்துறை வரலாற்றில் இப்பதவியை வகிக்கவுள்ள இரண்டாவது தமிழராகவும் கே.ஸ்ரீபவன் பதிவாகியுள்ளார். இதற்கு முன்னர் சுப்பையா சர்வானந்தா 1984- 1988 காலப்பகுதியில் இப்பதவியை வகித்துள்ளார்.
சிரேஷ்ட நீதியரசர் கே.ஸ்ரீபவன் ஒரு பார்வை. Read more

பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் சத்தியப்பிரமாணம்-

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 1952ம் ஆண்டு பெப்ரவரி 29ம் திகதி பிறந்த கே.ஸ்ரீபவனுக்கு தற்போது 62 வயதாகின்றது. யாழ். இந்துக் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை முடித்த அவர், இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்திலும் தனது மேற்படிப்பை தொடர்ந்தார். பின்னர் 27.03.2008ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக அவர் பொறுப்பேற்றார். இதேவேளை அண்மையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக கே.ஸ்ரீபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கல்வியற்கல்லூரி மாணவிக்கு உதவி-

TYNCதமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கற்றல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா எல்லப்பர் மருதன்குளத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக சிறியளவு நிதியுதவியினை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை வழங்கியது. இவ் நிகழ்வு இன்றைய தினம் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் இவ் உதவியினை புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் மாணவியின் தாயாரிடம் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், ஊடகப் பிரிவைச்சேர்ந்த திரு செ.சுகந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

tamil thesiya ilaignar kalakam 1tamil thesiya ilaignar kalakam2 tamil thesiya ilaignar kalakam3 tamil thesiya ilaignar kalakam4 tamil thesiya ilaignar kalakam5 tamil thesiya ilaignar kalakam6

யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்தில் 15.01.2015 தைத்திருநாள் அன்று மூளாய் வேரம் பகுதியில் உள்ள வளர்மதி விளையாட்டுக் கழகத்தினர் துடுப்பாட்ட நிகழ்வை நடாத்தினர் இவ் நிகழ்வின்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வளர்மதி விளையாட்டுக் கழகத்தின் உத்தியோகபூர்வ பெயர்ப் பலகையினை திறந்து வைத்தார். தொடர்ந்து விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு அவர் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.

valarmathi1valarmathi2valarmathi3valarmathi4

vaddukoddaiகிராமிய வைத்தியசாலைகளுக்கு உதவும் நோக்கில் ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் சற்கரநாற்காலி வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கும் வழங்கப்பட்டது. அதனை வைத்திய சாலைப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி திருமதி காந்தநேசன் பெற்றுக்கொண்டார்.

பத்திரிகை சுதந்திரம் அதிகரிக்கும் என ஹியூ ஸ்வைர் நம்பிக்கை-

camp_uk_minister_001camp_uk_minister_007camp_uk_minister_015புதிய அரசாங்கத்தின் கீழ் பத்திரிகை சுதந்திரம் அதிகரிக்கும் என தான் நம்புவதாக பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார். அவர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துவிட்டு திரும்பிய பின்னரே மேற்கண்டவாறு கூறியுள்ளார். முதற்தடவையாக யாழ்ப்பாணம் சென்ற இவர், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சத்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். யாழ்ப்பாணத்தில் அவர் பிரிட்டிஷ் கவுன்ஸில், ஐக்கிய இராச்சியம் நிதியுதவி வழங்கும் ஹலோ நம்பிக்கை நிதியத்தின் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகள், ஆனையிறவு, சபாபதிபிள்ளை நலன்புரி கிராமம் ஆகியவற்றை பார்வையிட்டார். வடமாகாணத்தில் பல்வேறு பரிமாணம் கொண்ட பிரச்சினைகளை நான் அறிந்துகொண்டேன். நல்லிணக்கம், பொறுப்புகூறல், இராணுவத்தின் வகிபாகம், அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள், இலங்கைக்கு பிரித்தானியா உதவ கூடிய வழிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதலமைச்சருடன் பேசினேன். அதுமட்டுமன்றி மீண்டும் யுத்தத்துக்கு பலியாகக் கூடாதென்பதை வலியுறுத்தும் சின்னமாக ஆனையிறவுள்ளது என்றார்

இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை-

இலங்கையில் பிறந்த சகலருக்கும் இரட்டை இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும். இலங்கையில் 10மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை பெறவிரும்புவோருக்கும் அதற்கான வழிவகைகள் செய்யப்படும். இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கிகாரத்தை பெறவேண்டும். இவர்களுக்கான விஸா கட்டணம் 2.5மில்லியன் ரூபாவாகும். இதனை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக மட்டக்களப்பில் கவனயீரப்பு-

maddakalapuகாணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில் இன்று இடம்பெற்றது. இதில் ‘எனது பிள்ளையை கண்டுபிடித்துத் தரவும்’, ‘மகிந்த அரசில் காணமல் போனவர்களை மைத்திரி அரசே தேடித்தா’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதிக்கு வழங்குமாறு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா மற்றும் பா.அரியநேந்திரன் ஆகியோரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

சங்கானை வைத்தியசாலைக்கு ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் அன்பளிப்பு

sanganai1கடந்த 22.01.2015 அன்று வலி மேற்கு பிரதேசத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் சங்கானை வைத்திய சாலைக்கு ஜேர்மனிய நாட்டு புலம் பெயர் தமிழ் மக்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில்  சங்கானை வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி திரு. செந்தூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்நாள் வடமாகான சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம். சித்தார்த்தன், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்த சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்), திருமதி. ஜெயகுமார், வசந்தி ஆகியோர் வருகை தந்திருந்தனர். தொடர்ந்து வைத்திய சாலையின் செயற்பாடுகள் மற்றும் பற்றாக் குறைகள் தொடர்பில் மேற்படி குழுவினர் ஆராய்ந்ததுடன் சிறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் தாம் உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதே வேளை வைத்தியசாலை பொறுப்புவைத்தியரது கோரிக்கைகளில் ஒன்றான கழிவுகள் போடுவதற்கான பிளாஸ்டிக் பெட்டிகளை கொள்வனவு செய்யும் பொருட்டு வைத்திய சாலை நலன்புரிச் சங்கத்திற்கு வழங்குவதற்கென சிறு தொகைப்பணத்தினையும் ஜேர்மன் நாட்டின் தழிழ் உறவுகள் சார்பில் சபாரட்ணம்.ஜெயகுமார் வழங்கிவைத்தார்.

sanganai2sanganai3sanganai4sanganai5sanganai6

பொன்னாலை நாராயணன் தாகசாந்தி நிலையம், அன்னதான மண்டபம் சனசமூக நிலையம் திறந்து வைப்பு-

ponnalaiபொன்னாலைச் சந்தியில் மிக நீண்ட காலமாக பொதுமக்களது பங்களிப்புடன் தலைவர் ஆனந்தசித்திரசேனன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பொன்னாலை நாராயணன் தாகசாந்தி நிலையம் பொன்னாலை நாராயணன் அன்னதான மண்டபம் மற்றும் பொன்னாலை சனசமூக நிலையம் என்பன 15.01.2015 அன்று மதியம் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் அ.சோதிநாதன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கொளரவ விருந்தினராக நல்லைக் குருமணிகளும் கலந்து சிறப்பித்துக் கொண்aடனர். இவ் நிகழ்வில் பொன்னாலை தகசாந்தி நிலையத்தினை நல்லைக் குருமணிகள் திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து பிரதேச செயலர் அ.சோதிநாதன் அவர்களால் பொன்னாலை நாராயணன் அன்னதான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் பொன்னாலை நாராயணண் சனசமூக நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

ponnalai 1 ponnalai 2 ponnalai 3 ponnalai 4 ponnalai 5 ponnalai 6

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடக அறிக்கை-

TYNC“கோவில்குளம் இளைஞர் கழகம்” எனும் பெயரில் கலை, கலாசார, சமூக அபிவிருத்தி திட்டங்களில் இயங்கிவந்த எமது கழகம் பெரியோர்கள், கல்விமான்கள், சமூக நலன் விரும்பிகளின் வேண்டு கோளிற்கிணங்க எமது இளைஞர் கழகமானது “தமிழ் தேசிய இளைஞர் கழகம்” எனும் பெயரில் இன்று (29/01/2015) தொடக்கம் இயங்கவுள்ளது.

குறித்த கிராமத்தின் பெயர் கொண்டு ஆரப்பிக்கப்பட்ட எமது கழகம் இன்று வவுனியா மாவட்டத்தில் மட்டுமல்லாது பல மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் அங்கத்தவர்களை கொண்ட ஒரு கழகமாக வளர்ச்சி கண்டுள்ளது. எமது ஆலோசகர்கள் மற்றும் இளைஞர்களின் துடிப்பானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளினால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை சொற்ப காலத்தில் முன்னெடுக்கப்பட்டதினையும், திட்டங்களாக மக்கள் நலன் கருதிய செயற்பாடுகளான பேரூந்து தரிப்பு நிலையங்கள் அமைத்தலும், புனரமைத்தல், நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை, பாடசாலைகளுக்கு தேவையான எம்மால் இயன்ற பௌதீக வளங்களை வழங்கியமை, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகள் வழங்கியமை, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள், இளைஞர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள், சிறுவர், முதியோர் இல்லங்களுக்கான உதவிகள் மற்றும் சேவைகள் போன்ற பல்வேறு செயற்திட்டங்களை மக்கள் வெகுவாக பாராட்டியமை குறிப்பிடத்தக்கது. இவ் செயற்பாடுகளை பன்முகப்படுத்துவதே எமது கழகத்தின் பிரதான நோக்கமாகும். Read more