மாதகல் புனித தோமையர் தேவாலய மாலைநேரப் பள்ளிக்கு கட்டிடம் அமைப்பு- (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம், மாதகல் புனித தோமையர் தேவாலய வளாகத்தில் மாலைநேரப் பள்ளியினை நடாத்துவதற்கு ஒரு கட்டிடம் இல்லாத நிலைமை இருந்தது. இந்த மாலைநேரப் பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்திற்கான நிதியுதவியாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான தனது நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதியினைக் (100,000) கொடுத்து மேற்படி முன்பள்ளிக்கான கட்டிட வேலைகளை ஆரம்பித்து வைத்தார். இந்த நிதியுடனும், மாதகலைச் சேர்ந்த வெளிநாட்டு அன்பர்களின் நிதியுதவியுடனும் மேற்படி முன்பள்ளியின் கட்டிட வேலைகள் இடம்பெற்று தற்போது பூர்த்தியடைந்துள்ளன. Read more